சமுக வலைதளங்களில் இருந்து வெளியேறும் பிரதமர் மோடி – டிரண்டிங் ஆகும் ‘NoSir’ ஹேஸ்டேக்

இந்தியா

சமுக வலைதளங்களில் இருந்து வெளியேறும் பிரதமர் மோடி – டிரண்டிங் ஆகும் ‘NoSir’ ஹேஸ்டேக்

சமுக வலைதளங்களில் இருந்து வெளியேறும் பிரதமர் மோடி – டிரண்டிங் ஆகும் ‘NoSir’ ஹேஸ்டேக்

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார். அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் ‘NoSir’ என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து ‘#NoSir’ ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும் டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் தனது டுவிட்டரில் வெறுப்புணர்வை முதலில் கைவிடுங்கள் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது தீர்வு அல்ல’ என ராகுல் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...