சிஏஏ திருத்த சட்டத்தை ஒருபோதும் வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 

இந்தியா

சிஏஏ திருத்த சட்டத்தை ஒருபோதும் வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 

சிஏஏ திருத்த சட்டத்தை ஒருபோதும் வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: சட்ட அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு, ஆகியவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பல வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள், உளவுத்துறை அதிகாரி உட்பட 35 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் உத்திரகாண்ட் மாநிலம் டெராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத கூறுகையில்:-


சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை சமாதானப்படுத்துவோம். அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது? அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒற்றுமையாக இருப்பது தான், இந்தியாவின் பெருமை என கூறியுள்ளார்

Leave your comments here...