டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு

இந்தியா

டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு

டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.

மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் கலவர வழக்கை விசாரிக்க இரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டில்லி கலவர வழக்கை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.கே. சிங் மேற்பார்வையில், குற்றப்பிரிவின் கீழ் ஜோய் டிர்கி, ராஜேஷ் தியோ ஆகிய இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 18 எப்.ஐ.ஆ.ர்கள் மற்றும் கைதான 106 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கை விவரங்கள் இரு சிறப்பு விசாரணைக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு துணை கமிஷனர்களும் உடனடியாக பொறுப்பேற்றனர்.

Leave your comments here...