சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மஜிபூர் பகுதியில் இருபிரிவினரிடையே மோதல் – கற்களை வீசி தாக்குதல்

இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாப்ராபாத் மெட்ரோ ரயில்நிலையம் அருகில் நேற்று இரவு முதல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சந்த்பாக், மவுஜ்பூர் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மவுஜ்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுபடுத்த போலீசார் முயற்சித்தனர்.

இதனால், போராட்டம் வன்முறையாக மாறியது.மோதலை தொடர்ந்து பாதுகாப்பு கருதி, மவுஜ்பூர்- பாபர்பூர் இடையேயான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகைதரும் நிலையில், தலைநகர் டில்லியில் வன்முறை வெடித்ததால், இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

Leave your comments here...