குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு வரும் அடுத்த ஆப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியா

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு வரும் அடுத்த ஆப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு வரும் அடுத்த ஆப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாஜகவின் செய்தி தொடர்பாளரரும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான அஸ்வினி பாட்டியா, மற்றும் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில் கடந்த 4 பொதுத்தேர்தலில் அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவது அபாயகரமானது. குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அவர்களின் விவரத்தை 48 மணிநேரத்தில் கட்சி இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும்.

இந்த விவரங்களை, 72 மணி நேரத்திற்குளும் அரசியல் கட்சிகளும், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.



மேலும் குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்தும், வெற்றி வாய்ப்பை தாண்டி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்தும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும்.

அவ்வாறு அரசியல் கட்சிகள் விவரங்களை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம், கோர்ட்டில் முறைப்படி தெரிவிக்க வேண்டுமெனவும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். உத்தரவை 2018 ல் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் செயல்படுத்தவில்லை என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார்.


Leave your comments here...