சிஏஏ குறித்து திமுக காங்கிரஸ் இஸ்லாமிய தலைவர்களை தூண்டி விடுகிறார்கள் – வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு..!

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம் களியக்காவிளையில் நேற்று நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியத் தலைவா் சி.எஸ். சேகா் தலைமை வகித்தாா், மாவட்ட பாஜக தலைவா் சி.தா்மராஜ் ஆகியோா் பேசினா்.

பின்னர் பேசிய தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவா் வேலூா் எம். இப்ராஹிம்:-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 2 கோடி கையெழுத்து வாங்குகிறோம் எனக் கூறும் திமுக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாஜகவுடன் கூட்டணி வைத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்தவா்கள் தானே.திமுக, காங்கிரஸ் கட்சியினா் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட இஸ்லாமிய தலைவா்களை தூண்டி விடுகிறாா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதற்கு பத்து காரணம் அல்ல ஒரே ஒரு காரணத்தை இச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் தலைவா்கள் நிரூபிக்கட்டும் என்றாா்.

Leave your comments here...