அறநிலையத்துறை அலட்சியம் : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிலைகள் சேதம்: முதல்வர் நடவடிக்கை எடுக்க அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை..!!

சமூக நலன்

அறநிலையத்துறை அலட்சியம் : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிலைகள் சேதம்: முதல்வர் நடவடிக்கை எடுக்க அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை..!!

அறநிலையத்துறை அலட்சியம் : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிலைகள் சேதம்: முதல்வர் நடவடிக்கை எடுக்க அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் குலசேகரப்பட்டினம், ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வரும், இக்கோவில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்த படியாக நடைபெறுகிறது. இக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இக்கோவிலில் முத்தாரம்மன் மூலஸ்தான வெளி சுவற்றில் உள்ள துர்கை அம்மன், பிரம்மசக்தி அம்மன் சிலைகள் பல மாதங்களாக சேதம் அடைந்து உள்ளது. மேலும் பெண்கள் ஆண்கள் கழிப்பறைகள் ஏதோ பெயரளவில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே உள்ளது இரவு நேரங்களில் தங்குவதற்க்கு சரியான தங்குமிட வசதிகள் கிடையாது, பக்தர்களை ஒழுங்குபடுத்த உரிய காவலர்கள் இல்லை , குப்பைகளை முறையாக அள்ளாமல் தேங்கி கிடக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

அகிலபாரத இந்துமகாசபா மாநில பொதுசெயலாளர் முத்தபா மாநில செயலாளர் ஐயப்பனுடன் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கோவிலை பார்வையிட்ட போது


இது கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனதை மிகவும் பாதிப்படைய செய்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சேதம் அடைந்த சாமிசி லைகளை பார்த்து கண் கலங்கி செல்கின்றனர். கோவில் நிர்வாகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் உடனே சிலைகளை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்கள். இது குறித்து முதல்வரின் தனிபிரிவுக்கு புகாரும் அனுப்பி உள்ளார்கள்.

நமது நிருபர்
தூத்துக்குடி பரமசிவம்

Leave your comments here...