இந்தியா முழுவதும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் டோல் கேட்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது : மத்திய அமைச்சர் ஒப்புதல்..!!

இந்தியா

இந்தியா முழுவதும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் டோல் கேட்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது : மத்திய அமைச்சர் ஒப்புதல்..!!

இந்தியா முழுவதும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் டோல் கேட்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது : மத்திய அமைச்சர் ஒப்புதல்..!!

நாடு முழுவதும் 540  சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், எரிபொருள்  மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் நேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும்.இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் கார்டு அனைத்து  சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டோல் ப்ளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் பாஸ்டேக் அறிமுகத்துக்கு முன்னர் இருந்ததைவிட 29 சதவிகித அதிகரித்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் சிவ சேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கமளித்த மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, “நாடு முழுவதும்  தற்போது டோல்க்களில் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளது உண்மைதான்.


பாஸ்டேக் அல்லாமல் இன்னும் பல இடங்களில் ரொக்கமும் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இதுவரையில் 1.4 கோடி பாஸ்டேக் வழங்கியுள்ளோம். இன்னும் கூடுதலாக 1 கோடி பாஸ்டேக் வழங்கவும் தயாராகி  உள்ளோம். விரைவில் காத்திருப்பு நேரம் குறையும்” என்றார். பாஸ்டேக் திட்டம் மூலம் நேரம் குறைவு என்பதற்காக தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இதனால், நேரம் அதிகமாகி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும்  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave your comments here...