தஞ்சாவூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..!!

சமூக நலன்தமிழகம்

தஞ்சாவூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..!!

தஞ்சாவூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது 2 ஐம்பொன் சிலைகள்  கண்டெடுப்பு..!!

தஞ்சாவூர் அடுத்த, தேவராயர்பேட்டை கிடங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி ராமலிங்கம். இவர், நேற்று முன்தினம் மாலை, வீடு கட்ட, தொழிலாளர்கள் மூலம் பள்ளம் தோண்டினார். அப்போது, மண்ணுக்கடியில் இருந்து இரண்டே கால் அடி உயரமுள்ள அம்மன் சிலையும், மூன்று அடி உயரமுள்ள விஷ்ணு சிலையும் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து தகவலறிந்து வந்த பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் இரண்டு சிலைகளையும் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றார்.

இந்த சிலைகள், எந்த நூற்றாண்டை சேர்ந்தது என தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு பின்னர் சிலைகள் குறித்த விவரங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave your comments here...