தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் விழா: கணபதி ஹோமம்..

ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் விழா: கணபதி ஹோமம்..

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் விழா: கணபதி ஹோமம்..

தஞ்சாவூா் பெரியகோயில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இத்திருக்குடமுழுக்கு விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.


நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீஷோடச மஹாகணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, தனபூஜை, லஷ்மி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரஹ ஹோமம், மாலையில் பிரவேச பலி ஆகியவை நடைபெற்றன. இன்று காலை 9 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் ரசேஷாக்ன ஹோமம், 30-ம் தேதி காலை 9 மணிக்கு மூா்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, கூஷ்மாண்டபலி, பா்யக்னி கரணம், ஜன. 31ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஆச்சாா்யதசவித மங்களக் கிரியைகள், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தீா்த்த சங்கிரஹணம், மாலை 5.30 மணிக்கு மேல் மிருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதன் பின்னா், குடமுழுக்கு விழாவுக்கான யாக சாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, 5ஆம் தேதி அதிகாலை வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பிப். 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.!

Leave your comments here...