பாக்கிஸ்தானில் இந்துகோவில் மீது தாக்குதல்- சிலைகள் உடைப்பு..!

உலகம்

பாக்கிஸ்தானில் இந்துகோவில் மீது தாக்குதல்- சிலைகள் உடைப்பு..!

பாக்கிஸ்தானில் இந்துகோவில் மீது தாக்குதல்- சிலைகள் உடைப்பு..!

பாகிஸ்தானில் சமீப காலமாக இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து வருகிறார்கள். மேலும் அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ நகரில் தார் கிராமம் உள்ளது. இங்கு மாதா தேவால் பிட்டானி என்ற பிரசித்தி பெற்ற ஹிந்து கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஞாயிறன்று இரவு இடித்து தரைமட்டமாக்கியதுடன், சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற ஹிந்து கிராமவாசி போலீசில் புகார் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலை பார்வையிட்டு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் எப்.ஐ.ஆர்.எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கோயிலுக்கு நுழைந்த மர்மநபர்கள் குறித்து கிராமவாசிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சீக்கிய மதத்தை தோற்று வித்தவரான  குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா், அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...