சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை – அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்தது.!

தமிழகம்

சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை – அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்தது.!

சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை – அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்தது.!

விருதுநகர் மாவட்டம் கொங்கலாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் விளையாடச் செல்வதாக கூறிவிட்டு பள்ளி சீருடையை கூட மாற்றாமல் வெளியே சிறுமி விளையாட சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடினார்.

இந்நிலையில் 21 ஆம் தேதி காலை கொங்கலாபுரம் கிராமத்தின் எல்லைப்பகுதியில் சிறுமி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமி பிரித்திகாவின் உடலை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் போலீசார் 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அசாமை சேர்ந்த மஜம் அலி என்ற வடமாநில இளைஞன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

Leave your comments here...