வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு அதிரடி…!!

இந்தியா

வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு அதிரடி…!!

வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய அரசு அதிரடி…!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 மாதகாலமாக அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதில் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி அப்துல் ஹக்கான், முன்னாள் சபாநாயகர் நசீர் அகமது குரேசி, மக்கள் மாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அப்பாஸ்வானி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரஷித் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...