பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்…? நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட பாஜக…!

தமிழகம்

பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்…? நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட பாஜக…!

பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்…? நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட பாஜக…!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் மகக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குமரி மாவட்ட தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், மாணவர்கள் கோசம் எழுப்பியதாகவும், கல்லூரி தாளாளர் ஆதரவுடன் அங்கு பயிலும் மாணவர்கள் கோஷங்கள் போட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கல்லூரி சேர்மனிடம் மனு கொடுப்பதர்க்காக இந்து முன்னனி மாவட்ட தலைவர் மிசா சோமன், கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர் குமரி பா.ரமேஷ் , உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.

இது குறித்த கல்லூரி நிர்வாகி மஜித்கானிடம் கேட்டப்போது; ‘எங்கள் கல்லூரியில் அப்படிதான் நடக்கும் என்றும் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மாவட்ட பாஜக தொண்டர்களுக்கு , இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தெரியவே 100க்கும் மேற்பட்டவர்கள் கூடி கல்லூரி சேர்மனை கண்டித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளைப் கூறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி மஜித்கான் மன்னிப்பு கேட்டது உள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டது. மேலும் கல்லூரியில் கோஷம் போட்ட மாணவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave your comments here...