ரஜினிகாந்துக்கு ஆதரவாக ட்விட்டரில் டிரெண்டாகும் “#மன்னிப்பு_கேட்க_முடியாது” ஹேஷ்டேக்..!

தமிழகம்

ரஜினிகாந்துக்கு ஆதரவாக ட்விட்டரில் டிரெண்டாகும் “#மன்னிப்பு_கேட்க_முடியாது” ஹேஷ்டேக்..!

ரஜினிகாந்துக்கு ஆதரவாக ட்விட்டரில் டிரெண்டாகும் “#மன்னிப்பு_கேட்க_முடியாது” ஹேஷ்டேக்..!

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா ஜனவரி 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.“1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:-  1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்  என தெரிவித்தார்.

இந்நிலையில்  சர்ச்சை கருத்தை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க  முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

“#மன்னிப்பு கேட்க முடியாது” என்ற ஹேஸ்டேக் மற்றும் ‘#பெரியாராவதுமயிராவது’ ஹேஸ்டேக் சமூக வலைதளமான டுவிட்டரில் தற்போது தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதில் #பெரியாராவதுமயிராவது ஹேஸ்டேக் டிரெண்டாகி முதல் இடத்தில் உள்ளது.

இதன் மூலம் பலர், நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுபோல “#சூப்பர்சங்கிரஜினி”  #ரஜினிஒருமெண்டல் என்ற ஹேஸ்டாக்கில் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave your comments here...