மறந்து விடாதீர்கள்: நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்..!

சமூக நலன்

மறந்து விடாதீர்கள்: நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்..!

மறந்து விடாதீர்கள்: நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்..!

போலியோ வைரஸ் என்பது நம் உடலின் தொண்டை, குடல் பகுதியில் தங்கியிருக்கும் மிகவும் மோசமான கிருமி. இது மலம் கழித்தலின் மூலமாகவோ அல்லது சளி, வாந்தி, எச்சில் மூலமாக காற்றில் பரவி மற்றவர்களுக்கு தொற்று நோயை உண்டாக்கும். அவர்களுக்கு பக்கவாதம், நிரந்தரமாக உடல் உறுப்புகள் செயலிழத்தல் ஏன்..சிலருக்கு மரணம் கூட ஏற்படக் கூடும்.இந்த போலியோ வைரஸை முற்றிலும் அழிக்க முடியாது என்றாலும், அதைக் செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் கண்டுபிடிக்கப்பட்டதே இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து. இதை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலம் போலியோ பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். எனவேதான் அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு வருடமும் முகாம்கள் அமைத்து இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது. இது ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன.19 (நாளை) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும்எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள்.

Leave your comments here...