ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு துறையில் வேலை: ரவீந்திரநாத் குமார் எம்பி தகவல்..!

தமிழகம்

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு துறையில் வேலை: ரவீந்திரநாத் குமார் எம்பி தகவல்..!

ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி  வீரர்களுக்கு அரசு துறையில் வேலை: ரவீந்திரநாத் குமார் எம்பி தகவல்..!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நடைப்பெற்றது.

இதில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  கடைசி சுற்றில் களமிறங்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.

இதில் 14 காளைகளை தழுவிய கார்த்திக் 2-வது பரிசும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3-வதும் பரிசும் வென்றனர். முதலிடம் பிடித்த ரஞ்சித்குமாரின் சகோதரர் ராம்குமார் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசு பெற்ற ரரஞ்சித்குமாருக்கு பரிசாக ரூ.7 லட்சம் மதிப்புள்ள 4 பசுமாடுகளும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் பரிசாக கார் வழங்கப்படுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குலமங்கலம் மாரநாடு என்பவரின் கருப்பன் என்ற காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகள்,  688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளையை அடக்கி முதலிடம் பிடித்த வீரர் ரஞ்சித்.!

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி ஒருவரும், மயங்கி விழுந்த ஒருவரும் என 2 பேர் உயிரிழந்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் முட்டியதில் காயமடைந்த  9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் வந்திருந்தனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைத்தால், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என ரவீந்திரநாத் குமார் எம்பி தெரிவித்துள்ளார். இது இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.!

Leave your comments here...