சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது: ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தியா

சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது: ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது: ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களித்தற்கான மிக உயரிய சிவில் விருது சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது ஆகும். 2020-ஆம் ஆண்டு சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த விருதுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.  மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://nationalunityawards.mha.gov.in.  என்ற இணையதள முகவரியில்  இந்த விண்ணப்பங்கள் பெறப்படும்.

சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் இந்த விருதை மத்திய அரசு நிறுவியுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, அனைவரையும் ஊக்கப்படுத்தக் கூடிய பங்களிப்புக்கும், வலுவான, ஒற்றுமையான இந்தியாவின் நெறிகளை வலுப்படுத்தும் பணிகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த விருது.

Leave your comments here...