திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.!

சமூக நலன்

திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.!

திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.!

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.ஹரிவராசனம் விருது இசை உலக ஜாம்பவான்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அப்படி விருது வழங்குபவர்களுக்கு சபரிமலையில் இசை கச்சேரி நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறார்கள்

கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்க்பட்டது.இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.ஹரிவராசனம் விருது பாடகர் கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சபரிமலையில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

Leave your comments here...