இந்து மத கடவுளை இழிவுபடுத்தி, “தாராள பிரபு” படத்தின் போஸ்டர்: ஹரிஷ் கல்யாணுக்கு குவியும் கண்டனங்கள்..!

இந்தியா

இந்து மத கடவுளை இழிவுபடுத்தி, “தாராள பிரபு” படத்தின் போஸ்டர்: ஹரிஷ் கல்யாணுக்கு குவியும் கண்டனங்கள்..!

இந்து மத கடவுளை இழிவுபடுத்தி, “தாராள பிரபு” படத்தின் போஸ்டர்: ஹரிஷ் கல்யாணுக்கு குவியும் கண்டனங்கள்..!

சமீப காலமாக இந்து கடவுள்களை குறித்து தவறாகன சித்தரித்து தமிழ் படங்கள் வெளியாகி வருகிறது.  நடிகர் சல்மான் கான் நடித்த லவ்ராத்திரி என்ற ஹிந்தி படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக, பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சையானது.இதேபோல் நடிகர் கமல் நடித்த தசாவதார‌ம் பட‌த்‌தி‌ல் இ‌ந்து கடவுளை அவ‌ம‌தி‌க்கு‌ம் கா‌ட்‌சியை ‌நீ‌க்கா ‌வி‌ட்டா‌ல் பட‌‌த்தை ‌திரை‌யிட ‌விட மா‌ட்டோ‌ம் எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி அமை‌ப்பாள‌ர் ராமகோபால‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை வ‌ிடு‌த்து இருந்தார். இதேபோல் நடிகர் ஜெய், சந்துரு இயக்கிய படம் நவீன சரஸ்வதி சபதம்’. இப்படத்தில் இந்து மதத்தினை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரத் மக்கள் கட்சி அமைப்பினர் புகார் கூறி இருந்தனர் ஆனால் படம் தோல்வி தான் சந்தித்து.

இந்நிலையில் இந்து மத கடவுளை இழிவுபடுத்தி, தாராள பிரபு படத்தின், ‘போஸ்டர்’ வெளியிட்டதற்கு, கண்டனங்கள் எழுந்து உள்ளன.விந்து தானத்தை மையமாக வைத்து, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். இப்படம், தமிழில், ‘தாராள பிரபு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.ஹரிஷ் கல்யாண், நாயகனாக நடிக்க, தன்யா ஹோப், நாயகியாக நடிக்கிறார். கிருஷ்ண மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தின், முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்து மத கடவுளான பிரம்மாவை இழிவுப்படுத்தும் வகையில், போஸ்டரில், ஹரிஷ் கல்யாண், ‘போஸ்’ தந்து உள்ளதாக கூறப்படுகிறது.தாமரை மலரில், மூன்று தலைகளுடன் அமர்ந்தபடி உள்ள ஹரிஷ் கல்யாண் கைகளில், குழந்தைகள் தவழ, கீழே, ‘தாராள பிரபு’ தலைப்பு, விந்து அடையாளத்துடன் இடம் பெற்றுள்ளது.’சினிமாவில், கருத்து சுதந்திரம் தவறாகவும், குறிப்பாக, இந்து மதத்திற்கு எதிராகவும், அதிகம் பயன்படுத்தப்படு கிறது’ என, ஹிந்து மத உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் பாஸ்ட்லுகினை பிப் சங் புகழ் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நண்பர் ஹரிஸ் கல்யாணுக்காக பதிவு செய்து உள்ளார்.

இதுபோன்ற அசிங்கமான செய்கையால், படத்திற்கு விளம்பரம் தேடுவதாக, படக்குழு மீது, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்சார் போர்டில் தமிழக பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பலரும் உள்ளார்கள். ஆனாலும் இந்து கடவுள் அவமதிப்பு செய்யும் காட்சிகளும் படத்தில் தொடர்ந்து வெளிய வருகிறது.

Leave your comments here...