கேரளாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி கடத்தி கொலை: காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்..!

இந்தியா

கேரளாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி கடத்தி கொலை: காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்..!

கேரளாவில் பயங்கரம்: காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி கடத்தி கொலை: காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கழுர் பகுதியை சேர்ந்தவர் இவா டேனியல். பிளஸ்-2 மாணவி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சபீர் என்பவருக்கம் காதல் ஏற்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி சபீருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

Eva Antony alias Gopika,

இதனால் சபீர் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சபீர் ஹூன்டாய் சர்விஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். அங்கு வேலைக்காக ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரும் மாயமாகி இருந்தது.

மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது சபீருக்கும், மாணவி இவா டேனியலுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. மாணவியை சபீர் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையே சபீர் கடத்தி வந்த கார் தமிழகத்தை நோக்கி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

நேற்று மாலை சபீர் ஓட்டி வந்த கார் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. போலீசார் காரை மடக்கினார்கள். காரில் சபீர் மட்டும் இருந்தார். மாணவி இவா டேனியல் இல்லை. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சபீரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காதலிக்க மறுத்ததால் மாணவியை காரில் கடத்தி வந்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக கூறினார். மாணவி பிணத்தை வரட்டுப்பாறை என்ற இடத்தில் வனப்பகுதியில் வீசியதாகவும் தெரிவித்தார். சபீரை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அவர் மாணவி உடல் வீசப்பட்ட இடத்தை காட்டினார்.

இன்று காலை எர்ணாகுளம் போலீசார் மாணவி உடலை மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொன்ற காதலன் சபீரை போலீசார் கைது செய்தனர்.

Leave your comments here...