சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி…!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று, சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இதனால் சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆன்மிக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம், பவுர்ணமியை ஒட்டி செப்.15 முதல் செப்.18 வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Leave your comments here...