நாளை ‘சபாக்’ படம் ரிலீஸ் : விளம்பரம் தேடவே ஜே.என்.யு போராட்டத்தில் கலந்து கொண்டார் நடிகை தீபிகா படுகோன்: வறுத்து எடுத்த நெட்டிசன்கள்..!

இந்தியா

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கி காயப்படுத்தினர். இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காயம்பட்ட மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதிலுக்கு ஏ.பி.வி.பி.யும் தாக்குதலுக்கு இடதுசாரி மாணவர்களை குற்றம்சாட்டுகிறது. மேலும் ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த வேறொரு புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மும்பையில் நடந்த போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்களான அனுராக் கஷ்யப், டாப்ஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாலிவுட் தீபிகா படுகோன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கே சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துள்ளார். தீபிகா சென்றபோது தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும் தீபிகா நடித்துள்ள சபாக் படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையே டிவிட்டர் தளத்தில் தீபிகா தனது படத்திற்கு விளம்பரம் தேடவே இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என கூறி வருகிறார்கள்.

Leave your comments here...