கட்சி அலுவலகம் கட்ட அரசு நிலம் ஒதுக்கீடு – முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலுங்கு தேசம் கேள்வி..!

அரசியல்

உங்கள் பண தாகத்திற்கு முடிவே இல்லையா? என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலுங்கு தேசம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் கட்ட அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விசாகப்படினம் மாவட்டத்தில் 2 ஏக்கர் நிலம் 2 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறப்பட்டு, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆந்திர கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் நாரா லோகேஷ் கூறியிருப்பதாவது: ஜெகன் ஆந்திர மாநிலம் என்ன உங்க தாத்தா ராஜா ரெட்டிக்கு சொந்தமானதா?. 26 மாவட்டங்களில் 42 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஜெகன் மோகன் வாங்கி உள்ளார். மக்கள் இடம் பணத்தை திருடி ரூ.500 கோடிக்கு அரண்மனை கட்டியுள்ளீர்கள். இந்த பணத்தை வைத்து 25 ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டி தரலாம். உங்கள் பண தாகத்திற்கு முடிவே இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...