நீட் தேர்வு முறைகேடு – NTA மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

இந்தியா

நீட் தேர்வு முறைகேடு – NTA மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

நீட் தேர்வு முறைகேடு – NTA மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.  ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.

இதனிடையே,  இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.  இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில்,  நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீதிபதி விக்ரம்நாத்  அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  இந்த மனுக்கள் மீது பதிலளிக்க தேசிய தேர்வுகள் முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தொடர்ந்து,  நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்திருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் எனவும்,  ஒரு தனிநபர் ஒட்டு மொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கும் சூழலை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான மற்றொரு வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...