சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு… விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!

அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கிடையே, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும், 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்றும், தேர்தலைக் கண்டு அஞ்சும் கட்சி அல்ல அதிமுக என்பதை அனைவருமே நன்கு அறிவர். மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களை செய்து திமுக வெற்றிபெற்றுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...