பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் – அண்ணாமலை

அரசியல்

பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் – அண்ணாமலை

பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் –  அண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை வந்தார். அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வழிபட்டார்.சாமி தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும் என அருணாசலேஸ்வரரை வேண்டி வணங்கினேன்.

திருவண்ணாமலை ஏடிஎஸ்பி வெள்ளைதுரை நேற்று ஓய்வு பெறும் நாளன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அந்த அறிவிப்பு மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கிறேன். அவரது விவகாரத்தில் எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் நீதிமன்றம் முறையான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறேன்.

இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் தான் செல்கின்றனர்.தேர்தலில் தோல்வி அடைவோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால் தான் இன்றைய கூட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 2-ம் கட்ட தலைவர்களை   அனுப்புகிறார்கள்.

பிரதமர் கன்னியாகுமரிக்கு வந்துள்ளது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அதனால் தான் பா.ஜ.க.வின் ஒரு தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை.விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ தேவையில்லை. விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்தாலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மக்கள் தடுக்கப்படவில்லை. எதில் எல்லாம் அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave your comments here...