கோடை வெயிலின் தாக்கம் – தமிழ்நாட்டில் ஜூன் 10ல் பள்ளிகள் திறப்பு..!

தமிழகம்

கோடை வெயிலின் தாக்கம் – தமிழ்நாட்டில் ஜூன் 10ல் பள்ளிகள் திறப்பு..!

கோடை வெயிலின் தாக்கம் – தமிழ்நாட்டில் ஜூன் 10ல் பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குநர் தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கையில், ‘2024 – 25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பை 4 நாட்கள் தள்ளிவைத்து, ஜூன் 10ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

Leave your comments here...