சாலை தடுப்புகளில் பொருத்தப்பட்ட ANPR Camera-க்கள் – சென்னை மாநகர காவல்துறை தகவல்..!

தமிழகம்

சாலை தடுப்புகளில் பொருத்தப்பட்ட ANPR Camera-க்கள் – சென்னை மாநகர காவல்துறை தகவல்..!

சாலை தடுப்புகளில்  பொருத்தப்பட்ட ANPR Camera-க்கள் – சென்னை மாநகர காவல்துறை தகவல்..!

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சாலை தடுப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணியானது விரைவில் அறிமுகபடுத்தப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க சுமார் 200-க்கும் மேற்பட்ட சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் பிரதான சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சலை உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு குற்றசம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பிரதான சாலையில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ANPR (Automatic number-plate recognition) எனப்படும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்ட சாலை தடுப்புகள் விரைவில் சென்னை மாநகரம் முழுவதும் அமைக்கப்படவுள்ளது.

தற்போது முதற்கட்டமாக 5 கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றசம்பவங்களில் ஈடுபட்டு தப்பிப்பவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய இந்த சாலை தடுப்புகள் உதவியாக இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...