முட்டிக்கொள்ளும் காவல்துறை போக்குவரத்துத்துறை – உடனடி தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

தமிழகம்

முட்டிக்கொள்ளும் காவல்துறை போக்குவரத்துத்துறை – உடனடி தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

முட்டிக்கொள்ளும் காவல்துறை போக்குவரத்துத்துறை – உடனடி தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

நாங்குநேரியில் பேருந்து நடத்துநருக்கும், காவலர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி பேருந்து நிறுத்தத்தில் ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அப்போது அரசுப் பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கெட் எடுக்க தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கு டிக்கெட் கிடையாது என்று காவலர் ஆறுமுகப்பாண்டியன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அரசு பேருந்தில் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா.. வேண்டாமா.. என்று சர்ச்சை எழுந்த நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தியது.

இந்த சம்பவம் எதிரொலியாக, ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஆங்காங்கே அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் போக்குவரத்துதுறை, காவல்துறை இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து உள்துறை செயலாளரும் போக்குவரத்து துறை செயலாளரும் நேற்று (மே 24) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave your comments here...