சத்தீஸ்கர் – பாதுகாப்புப்படையினர் நடத்திய வேட்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!

இந்தியா

சத்தீஸ்கர் – பாதுகாப்புப்படையினர் நடத்திய வேட்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!

சத்தீஸ்கர் – பாதுகாப்புப்படையினர் நடத்திய வேட்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்குழுவினரை அழிக்கும் முயற்சியை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள பிஜாபூர் மாவட்ட எல்லைப்பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை இறங்கியது.

அப்போது மேற்கொள்ளப்பட்ட என்கவுன்ட்டரில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் அனைவரும் சீருடை அணிந்துஇருந்ததாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மே 10-ம் தேதிபிஜாபூர் மாவட்ட காட்டில் பதுங்கியிருந்த 12 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேபோல், ஏப்ரல் 30-ம் தேதி நாராயன்பூர் மற்றும் கார்கர் மாவட்டங்களில் 3 பெண்கள் உட்பட 10 நக்சலைட்டுகளும் , ஏப்ரல் 16-ம் தேதி கார்கரில் 29 நக்சலைட்டுகளும் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதுவரையில் இந்த ஆண்டில் மட்டும் 112 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...