பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் – ராகுல் காந்தி

அரசியல்

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் – ராகுல் காந்தி

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் – ராகுல் காந்தி

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.  பின்னர்,  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால்,  இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும்,  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்துப் பேசினார்.

அப்போது  ராகுல் காந்தி கூறியதாவது: “15 – 20 நாள்களுக்கு முன்பு வரை வெற்றி குறித்து கணிக்கவில்லை,  180 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கணித்தேன்.  ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 தொகுதிகளிலேயே பாஜக வெல்லும்.  இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி பலமாக உள்ளது. ” எனத் தெரிவித்தார்.

Leave your comments here...