திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி.. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக – பாமகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

அரசியல்

திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி.. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக – பாமகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி..  நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக – பாமகவை கடுமையாக விமர்சித்த  எடப்பாடி பழனிசாமி..!

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, பழ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தார்.

முன்னதாக காய்கறி சந்தைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து காய்கறி சந்தை பகுதியில் நடந்து சென்று அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டறிக்கைகள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்… அதிமுகவுக்கு ஒரே நிலைப்பாடு. அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். பிடித்தம் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தோம். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஸ்டாலின் அதை நடைமுறைப்படுத்தவில்லை. 3 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இப்போது தேர்தல் வந்தவுடன் செயல்படுத்தப்படும் என்று சொல்கிறார். இது திமுகவின் வாடிக்கை.

திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.

அம்மாவை (முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை) ராஜ்நாத் சிங் புகழ்வது மகிழ்ச்சி. எதிரணியில், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கட்சித் தலைவர்கள், எதிரணியினர் பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். வாக்குக்கும் பாராட்டியதற்கும் சம்பந்தம் இல்லை.

திமுக கார்பரேட் கம்பெனி. அதிமுகவில் நான் ஒரு தொண்டன், தலைவன் அல்ல. அதிமுகவில் 100 சதவீதம் வாரிசு அரசியல் இல்லை. எனக்கு பின்னால் யாரோ ஒரு தொண்டன்தான் பொதுச் செயலாளராக வருவார். ஆனால், திமுகவில் அப்படியல்ல. திமுக கட்சியை ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் என்பது கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார் வருகிறார் என்பதை பொறுத்தது. தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது.

தேர்தல் அறிக்கையில் 98 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என சொன்னார் ஸ்டாலின். அது எவ்வளவு பெரிய பச்சை பொய். அதிமுகவிற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது. நிச்சயமாக 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். நான் என்ன பொய் பேசுகிறேன் என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும். உண்மையில், ஸ்டாலின்தான் மாறி மாறி பொய் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

Leave your comments here...