நாடாளுமன்ற தேர்தல்… பாஜக கூட்டணி 398 இடங்களை கைப்பற்றும் – கருத்து கணிப்பில் தகவல்..!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல்… பாஜக கூட்டணி 398 இடங்களை கைப்பற்றும் – கருத்து கணிப்பில் தகவல்..!

நாடாளுமன்ற தேர்தல்… பாஜக கூட்டணி 398 இடங்களை கைப்பற்றும் – கருத்து கணிப்பில் தகவல்..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்து வருகின்றன

பாஜக 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்து களப்பணியாற்றி வருகிறது. அதேவேளை, ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தீவிர களப்பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் டைம்ஸ் நவ்-ஈ.டி.ஜி நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 358 முதல் 398 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 21 முதல் 22 தொகுதிகளிலும், பிஜு ஜனதா தளம் கட்சி 10 முதல் 11 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 11 முதல் 15 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 29 முதல் 35 தொகுதிகளையும், பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 1முதல் 3 தொகுதிகளை கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 28 தொகுதிகளில் 21 முதல் 23 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும் என்றும் மற்ற இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 17 முதல் 21 இடங்களில் வெற்றி பெறும் என்றும், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி 5 முதல் 7 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...