பெங்களூருவில் பிரபல ஓட்டலில் மர்ம பொருள் வெடிப்பு… 8 பேர் காயம் – போலீசார் விசாரணை..!

இந்தியா

பெங்களூருவில் பிரபல ஓட்டலில் மர்ம பொருள் வெடிப்பு… 8 பேர் காயம் – போலீசார் விசாரணை..!

பெங்களூருவில் பிரபல ஓட்டலில்  மர்ம பொருள் வெடிப்பு… 8 பேர் காயம் – போலீசார் விசாரணை..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல உணவகம் ஒன்றில் இன்று (மார்ச் 1) மதியம் மர்மப் பொருள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தன.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சிலர் காயமடைந்துள்ளனர். 5 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை வெடித்தது என்ன, காரணம் என்னவென்று எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சில ஊடகங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உணவகத்தில் திடீரென ஏற்படும் வெடிப்பு அடங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...