அபுதாபியில் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கும் பிரம்மாண்ட முதல் இந்து கோவில்..!

இந்தியாஉலகம்

அபுதாபியில் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கும் பிரம்மாண்ட முதல் இந்து கோவில்..!

அபுதாபியில் பிரதமர் மோடி  நாளை திறந்து வைக்கும் பிரம்மாண்ட முதல் இந்து கோவில்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பக்தர்களுக்காக நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது, நாளை அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்லும் அவர் இன்று மாலை ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

அவர் நாளை (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார். கோவில் மட்டும் தரைத்தளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.

முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து பிரதமர் மோடி அன்று இரவே அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அபுதாபியில் இருந்து இந்தியா புறப்படுகிறார்.

Leave your comments here...