வெளிநாடுகளில் இருந்து நிதி… நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை..!

அரசியல்தமிழகம்

வெளிநாடுகளில் இருந்து நிதி… நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை..!

வெளிநாடுகளில் இருந்து நிதி… நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை..!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதாக எழுந்த புகார், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேவேளை, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வரும் 7ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.இதனிடையே, என்.ஐ.ஏ. சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். பிப்ரவரி 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புடையவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

Leave your comments here...