அயோத்தி ராமர் கோவில்.. பல நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை..!

இந்தியா

அயோத்தி ராமர் கோவில்.. பல நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை..!

அயோத்தி ராமர் கோவில்.. பல நூற்றாண்டு கால கனவு நிறைவேறியது- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை..!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

இதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரை படைசூழ புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சாரட் வாகனத்தில் வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். செங்கோல் ஏந்தியவாறு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து “நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முதன் முறையாக உரையாற்றுகிறேன்” என தனது உரையை தொடங்கிய அவர், :-

பல நூற்றாண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பால ராமர் சிலையை 5 நாட்களில் 13 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர். இப்போது, சட்டப்பிரிவு 370 என்பதும் வரலாறாக மாறிவிட்டது. மேலும், இந்தப் நாடாளுமன்றம் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.” என்று பேசினார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. நாட்டில் அந்நிய முதலீடு அதிகரிப்பதால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன.

சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி திட்டங்களில் உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறிவருகிறது. மேட் இன் இந்தியா என்பது தற்போது உலக பிராண்ட் ஆக மாறியிருக்கிறது. இந்திய ரயில்வே விரைவில் முழுமையாக மின்மயமாக்கப்படும். தாய் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத ஆதரவை அரசு வழங்கி வருகிறது. ஜி20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகின் பாராட்டை பெற்றது. கொரோனா பேரிடர் பாதிப்பிலிருந்து இந்தியா வெற்றிகரமான மீண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி மக்களுக்கு தூய்மையான குழாய் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் கிராமங்களுக்கு 4ஜி தொலைத் தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியும் இரட்டிப்பாகியுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை பாஜக அரசியல் ரீதியாக பயன்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தனது (அரசின்) உரையில் ராமர் கோயில் திறப்பு குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Leave your comments here...