அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. உற்சாகத்தில் பக்தர்கள்..!

ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. உற்சாகத்தில் பக்தர்கள்..!

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. உற்சாகத்தில் பக்தர்கள்..!

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது.

கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்டபோது பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். தற்போது, கோயிலுக்கு சிலை எடுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிலை இன்று நிறுவப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ஒவ்வொரு நாளும் சடங்குகள் ராம்லல்லாவின் பிரதிஷ்டை வரை தொடரும்.

அயோத்தியில் இன்று ராம்லல்லா சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து யாகங்கள் நடத்தப்படும். அதனை தொடர்ந்து, கணேஷ் அம்பிகை பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன் மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை அடுத்தடுத்து நடைபெறகிறது.

குழந்தை வடிவிலான ராமர் சில சன்னதிக்குள் நுழைந்ததும் ஜனவரி 19ம் தேதி அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 20 ஆம் தேதி, ராமர் கோயில் வளாகத்தில் சர்க்கரை, பழம் மற்றும் பூக்களை கொண்டு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து,  மேலும் இந்நாளில் கோயிலில் பல்வேறு நதிகளின் நீரால் சுத்திகரிக்கப்படும். மேலும், கோயிலின் கருவறையை சரயு நதியில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் கழுவப்பட்டு , வாஸ்து அமைதி மற்றும் அன்னாதிவாஸ் சடங்குகள் நடத்தப்படும்.

தொடர்ந்து, ஜனவரி 21ம் தேதி125 கலசங்களில் உள்ள புனித தீர்த்தங்களை கொண்டு ராம் லல்லா சிலை சுத்தம் செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லாவின் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, ராம் லல்லாவின் கண்கட்டு அவிழ்க்கப்படும். காலை பூஜை முடிந்த பின்னர், மதியம் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.

Leave your comments here...