அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 1000, பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம்

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 1000, பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 1000, பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக, சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்று, அரிசி மற்றும் பொருளில்லா குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே, அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரா்களிடம் டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் ஜன.14-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பொங்கல் திருநாளுக்குள் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அனைவருக்கும் ரூ. 1000-த்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Leave your comments here...