உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன..?

தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன..?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன..?

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன. தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை அதிகம் கவரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் ஜிடிபி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதேநேரம் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முதலீட்டாளர்களை வரவேற்றுப் பேசுகிறார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஜப்பான், என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்கு இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கையும் வெளியிடப்படுகிறது.

மேலும், வழக்கமாக புதிய முதலீடுகள் எப்போதும் சென்னையைச் சுற்றியே இருக்கும். ஆனால், இந்த முறை தென்தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-

1. ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை)

2. கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.

3. டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

4. பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.

5. வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)

6. டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு)

7. சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)

8. வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16 ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)

9. ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது)

10. குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.

Leave your comments here...