அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், காற்று குவிதல் காரணமாகவும் சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும் ஒன்றாக சேர்ந்து காற்று குவிதல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று மாலை மற்றும் இரவிலும், நாளையும் மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நெல்லை மாவட்டத்தில் மலையோர பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. வேப்பேரி, புரசைவாக்கம், மேடவாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது. இதையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Leave your comments here...