நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் – நாகர்கோவில் வரை நீட்டிப்பு..!

தமிழகம்

நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் – நாகர்கோவில் வரை நீட்டிப்பு..!

நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் – நாகர்கோவில் வரை நீட்டிப்பு..!

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கி வைக்கப்பட்டது. அதாவது சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.

இதனை அடுத்து நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் மட்டுமின்றி கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்தும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் போதுமான ரயில் வசதி இங்கு இல்லாததால், வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது.

ஜனவரி 4ம் தேதி முதல்: இந்த நிலையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட வாராந்திர வந்தே பாரத் ரயில் ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 25 ம் தேதி வரை வியாக்கிழமைகளில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நாகர்கோவிலில் புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...