வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்க வருகிறது படகு ஆம்புலன்ஸ்..!

தமிழகம்

வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்க வருகிறது படகு ஆம்புலன்ஸ்..!

வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்க  வருகிறது படகு ஆம்புலன்ஸ்..!

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நேரங்களில் பயன்படுத்தும் வகையில், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், படகு ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவையை, ‘இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, 900க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன.

ஆனால், மழை வெள்ள பாதிப்புகளின் போது, அவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையின் போது, 136 கர்ப்பிணியர் உட்பட 1,219 பேர், 108 ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக மீட்கப்பட்டனர். அதேநேரம், மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மீனவர்கள் உதவியுடன் படகு வாயிலாக நோயாளிகள் மீட்கப்பட்டனர்.

எனவே, ஆண்டு தோறும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, இரண்டு படகு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த, 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த படகு ஆம்புலன்சிற்கு, மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்துக்கும், 45 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் கூறியதாவது:படகு ஆம்புலன்ஸ் குறித்து அரசிடம் பரிந்துரை செய்யப்படும். இந்த ஆம்புலன்சில் ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் மற்றும் தீவிர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும்.

Leave your comments here...