பல் பிடுங்கிய விவகாரம் – ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின்..!

தமிழகம்

பல் பிடுங்கிய விவகாரம் – ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின்..!

பல் பிடுங்கிய விவகாரம் –  ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின்..!

பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது. 14 பேருக்கும் ஜாமின் வழங்கி நெல்லை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணைக்கு வந்தவர்கள் சித்தரவதை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்தனர். பல் பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். பல் பிடுங்கிய வழக்கை விசாரித்த நீதிபதி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், அம்பை ஏஎஸ்பி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் அம்பை போலீஸ் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்ததையடுத்து, அவர்கள் மீது நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அதில் 4 சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், போலீசார் என 15 பேர் மீது நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட் எண்: 1ல் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேர் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் திரிவேணி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு நெல்லை நீதிமன்றத்தில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 15 பேர் ஆஜராயினர். அப்போது அவர்கள் குற்றப்பத்திரிகை நகல்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதற்கட்டமாக பல்வீர்சிங், போலீசார் முருகேஷ், கார்த்திக்பாபு, இசக்கிராஜா ஆகிய 4 பேருக்கும் 4 வழக்குகளுக்கான தலா 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன. பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாஜி ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜரானதையொட்டி கோர்ட் வளாகத்தில் நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல் பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். பல் பிடுங்கிய வழக்கை விசாரித்த நீதிபதி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமின் அளித்துள்ளார்.

Leave your comments here...