மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுப்பு அவசியமற்றது – மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி

இந்தியா

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமற்றது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் பேசியதாவது: மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன்.

குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. ஆகையால், பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது. இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...