பிரதமர் மோடியின் திட்டங்களால் கவர்ந்த விவசாயி சங்கர்: கோவில் கட்டி வழிபாடு..!

தமிழகம்

பிரதமர் மோடியின் திட்டங்களால் கவர்ந்த விவசாயி சங்கர்: கோவில் கட்டி வழிபாடு..!

பிரதமர் மோடியின் திட்டங்களால் கவர்ந்த விவசாயி சங்கர்: கோவில் கட்டி வழிபாடு..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50), விவசாயி. இவரது மனைவி பானுமதி (40). இந்த தம்பதியின் மூத்த மகள் தீபா (23). இவருக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். மூத்த மகன் சதீஷ்குமார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வருகிறார். இளைய மகன் சூர்யா பிளஸ்-2 படித்து விட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.சங்கர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் மோடிக்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்த எண்ணினார்.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தபோது அவரின் செயல்களாலும், அவரை பற்றிய தனக்கு தெரிந்த தகவல்களாலும் கவரப்பட்ட சங்கர், நடிகர்களை போன்று மோடியின் தீவிர ரசிகர் என்று தன்னை அறிமுகப்படுத்தி பலரிடம் பெருமையுடன் கூறி வந்தார். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு நடத்த முடிவு செய்த சங்கர் அதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை மோடிக்கு கோவில் கட்டுவதற்காக ஒதுக்கி அதனை சீரமைக்கும் பணியை தொடங்கிய சங்கர், 8 அடி நீளம், 8 அடி அகலத்தில் கோவில் கட்ட பூமி பூஜையை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.அவரது இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தினர் யாரும் எதிர்ப்போ, அதிருப்தியோ தெரிவிக்கவில்லை. இது சங்கருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது.

இதையடுத்து துறையூரை சேர்ந்த ஸ்தபதியான தனபால் என்பவரிடம் பிரதமர் மோடியின் சிலை செய்து தருமாறு கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டு ஒரு மாத கால அவகாசத்தில் மோடியின் மார்பளவு சிலையை செய்து கொடுத்தார். இதற்கிடையே கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. நான்கு புறமும் கட்டிடம் எழுப்பி மேற்கூரை வேயப்பட்ட கோவிலில் மோடியின் சிலையை சங்கர் நிறுவினார். அன்று முதல் நாளில் மோடியின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, இரு புறமும் குத்து விளக்கேற்றி, பொங்கல் பிரசாதம் செய்து படையலிட்டு தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். அதன்பிறே சங்கர் மோடிக்கு கோவில் கட்டிய வி‌ஷயம் வெளியே தெரிந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி தனது பேரன் கிருத்திக் சர்வீன் பிறந்தநாளை மோடியின் கோவிலில் வைத்து கொண்டாடிய சங்கர், மோடியின் சிலை முன்பு கேக் வெட்டி உறவினர்களுக்கு வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதும் பிரதமர் மோடிக்கு சங்கர் கோவில் எழுப்பிய தகவல் அனைத்து இடங்களிலும் பரவியது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்து மோடிக்கு கட்டப்பட்ட கோவிலை அதிசயத்துடன் பார்த்து சென்று வருகிறார்கள்.

விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நான், இதில் போதிய வருவாய் இல்லாவிட்டாலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே என்னுடைய குழந்தைகளை படிக்க வைத்தேன். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தில் எரகுடி பகுதி தலைவராக நியமிக்கப்பட்ட நான் அதன் மூலம் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளேன்.என்னால் பெரிய படிப்பு படிக்க முடியாவிட்டாலும் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன். மகள் தீபா பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1105 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலும், பண வசதி இல்லாததாலும் அவரை டாக்டராக்கும் கனவு நிறைவேறவில்லை. இறுதியில் அவர் என்ஜினீயரிங் படித்தார்.

தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியின் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வியில் தகுதி வாய்ந்த மாணவ, மாணவர்கள் டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள், தூய்மை இந்தியா திட்டம், இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் போன்றவை மூலம் இன்று நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்த மோடியை நான் கடவுளாகவே பார்க்கிறேன். எனவேதான் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தற்போது அதனை கட்டியும் முடித்துள்ளேன்.

பிரதமர் மோடி சிலை…?

பல்வேறு சிரமங்களுக்கு இடையேயும் என்னால் முடிந்த அளவுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவில் இந்த கோவிலை கட்டியுள்ளேன். விரைவில் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். இந்த கோவிலை தொடர்ந்து பராமரிக்க ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளேன். தலைவர்களை அழைத்து வந்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவேன்.கட்சியையும், அரசியலையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவரது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் முன்னேறியவர். அவரது கொள்ளை பிடிப்பே என்னை கோவில் கட்ட தூண்டியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.!

Leave your comments here...