எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!

இந்தியாசமூக நலன்

எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!

எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!

டெல்லியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளில் வாழ்ந்து வரும் 40 லட்சம் பேரின் குடியிருப்புகளை அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டது. 40 லட்சம் பேரின் குடியிருப்புகளுக்கு அங்கீகாரம் அளித்ததை அடுத்து பிரதமருக்கு நன்றி தெரிவிக்க டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி :- பொய்யான வாக்குறுதியால் டில்லி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாங்கள் தற்போது டில்லியில், 40 லட்சம் மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கி உள்ளோம். ஏழைகளை மையமாக வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அதிகாரத்திற்காக அரசியலில் இருக்கின்றனர். சிலர் அதிகாரத்தில் இருக்கும் போது 2 ஆயிரம் பேருக்கு குடியிருப்புக்கள் வழங்கினர். இந்த குடியிருப்புகளை நாங்கள் காலி செய்துள்ளோம். அவர்கள் மக்களுக்காக அல்ல. நான் மக்களை ஏமாற்ற அனுமதிக்க மாட்டேன். எங்கள் ஆட்சியில் 17,00 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு ஒழுங்குபடுத்தி பாராளுமன்றத்தில் இரு அவைகள் மூலம் அனுமதி வழங்கி உள்ளோம்.

நாங்கள் இயற்றிய குடியுரிமை சட்டம் உண்மையானது நியாயமானது. நடுநிலையானது. ஆனால் எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர். எனது உருவபொம்மையை எரியுங்கள் , அரசு சொத்துக்களை எரிக்க வேண்டாம். போலீசாரை ஏன் தாக்க வேண்டும் ? போலீசார் யாருக்கும் எதிரி அல்ல. குடியுரிமை சட்ட மசோதா 130 கோடி மக்களை பாதிக்காது.

குடியுரிமை சட்ட மசோதா இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டது. எம்.பி.,க்களின் ஏகோபித்த முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதற்கு எம்.பி.,க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களை எதிர்கட்சிகள் பரவ விடுகின்றனர். இந்திய முஸ்லிம் மக்களிடம் பொய்யான தகவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஒற்றுமையில் வேற்றுமை என்பது மந்திரம். ஆனால் எதிர்கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக சதி செய்கிறது என கூறியுள்ளார்.!

Leave your comments here...