ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்குக் காரணம் மோடிதான் – வசுந்தரா ராஜே

அரசியல்

ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்குக் காரணம் மோடிதான் – வசுந்தரா ராஜே

ராஜஸ்தானில் பாஜக வெற்றிக்குக் காரணம் மோடிதான் – வசுந்தரா ராஜே

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணம் மோடிதான் என்று பாஜக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜல்ரபதான் தொகுதியில் வெற்றிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக பெற்றிருக்கும் வெற்றி குறித்து பேசிய வசுந்தரா ராஜே, இந்த வெற்றி, பிரதமர் அளித்த அனைவருடனும், அனைவரின் பங்களிப்புடனும், அனைவருக்கான வளர்ச்சி என்ற மந்திரத்தினால் கிடைத்தது.  பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. மிக முக்கியமாக இந்த வெற்றிக்குக் காரணம் நமது கட்சியின் தொண்டர்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், பாஜக 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 68 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.இரு முறை முதல்வராக இருந்தவரும் பாஜக வேட்பாளருமான வசுந்தரா ராஜே தான் போட்டியிட்ட ஜல்ரபதான் தொகுதியில் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave your comments here...