காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தைக் எதிர்ப்பதால் தோல்வியின் விளிம்பில் உள்ளது – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்ய பிரமோத்..!

அரசியல்இந்தியா

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

இந்நிலையில், சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சனாதன தர்மத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால் அக்கட்சி தோல்வியின் விளிம்பில் உள்ளது. சனாதனத்தை எதிர்த்து இந்தியாவில் அரசியல் செய்யமுடியாது. சனாதனத்தின் அழிவை அறிவிப்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து விட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Leave your comments here...